அதை நாங்கள்தான் முடிவு செய்வோம் – அதிமுக vs பாஜக அமைச்சர்கள்..

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (08:02 IST)
மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் 4 முதல் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கிடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட உறுதியாகிவிட்டன. காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற இருபெரும் தேசியக் கட்சிகளும் தங்கள் கூட்டணி விவரங்களை இறுதி செய்துவிட்டன. தமிழ்நாட்டில் காங்கிரஸ் –திமுக- விடுதலை சிறுத்தைகள் – கம்யூனிஸ்ட் கட்சிகள் எனப் பிரம்மாண்டமான கூட்டணி அமைந்துள்ளது.

பாஜக வோ தமிழ்நாட்டில் இன்னும் தனது கூட்டணியை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யவில்லை. ஆளும் அதிமுக அரசு மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக இருந்து செயல்படுகிறது ஊரறிந்த விஷயம் என்றாலும் அதிமுக வில் உள்ள சில மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் பாஜக வோடு கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அது தங்களுக்குப் பின்னடைவையே தரும் என நினைக்கின்றனர்.

மத்திய அமைச்சர் தம்பிதுரை பாஜக எனும் சுமையைஅ நாங்கள் தூக்கி சுமக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். அதேப்போல மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் ’ கூட்டணி தொடர்பாக பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்’ என வெளிப்படையாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுக தலைமை பாஜக வோடு சுமூகமாக இருந்து வந்தாலும் கட்சித் தொண்டர்களோ இரண்டாம் நிலைத் தலைவர்களோ பாஜகவோடு சேர சுத்த்மாக விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் வேறு வழியில்லாத சூழ்நிலையே நிலவிவருகிறது. அதிமுக அமைச்சர்களின் இத்தகையப் பேச்சால் பாஜக அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் எரிச்சலடைந்த பாஜக மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் அதிமுக அமைச்சர்களின் கருத்து குறித்த  கேள்வி ஒன்றுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். அவர் ‘பாஜகவுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணியில் வந்துசேரலாம் என்று கனவு காண வேண்டாம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. பாஜகவுடன் எந்தக் கட்சி சேர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது பாஜகதான்’ என அதிமுக அமைச்சர்களுக்குப் பதிலளித்துள்ளார்.

ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணிக்கு வேறு வழியில்லாமல் இருப்பதும் இந்த இருக்கட்சிகள்தான் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதும் தமிழக மக்கள் அறியாத விஷயம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்