சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (13:35 IST)
கஞ்சா வழக்கில் ஆஜராகவில்லை என்பதற்காக சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கி இருந்தபோது, அவரது காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாதம் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகவில்லை. அவருடைய வழக்கறிஞர் இது குறித்த மனுவை அளிக்க முன்வந்தபோது அந்த மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கின் விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்