''முடிஞ்சா என்னை கைது செய்''...போலீஸுக்கு சவால்விட்டவர் கைது

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (15:54 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக காவல்துறை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்த நபரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு  தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை அமைந்துள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில், அரவிந்த் நாகராஜன் என்ற பெயரில் இயங்கி வருபவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றி அவதூறு பரப்பியும், நாகரீமற்ற முறையில் பதிவிட்டு வந்த அவர், சமீபத்தில், தன்னை முடிந்தால் கைது செய்யும்படி, காவல்துறைக்குச் சவால்விட்டிருந்தார்.

ALSO READ: கர்ப்பிணி பெண் போலீஸ் வயிற்றில் எட்டி உதைத்த கணவர் மீது வழக்குப் பதிவு

இதுகுறித்து அவர் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில், இன்று , சென்னை காவல்துறையினர், சென்னைம் கே.கே நகரின் பகுதியைச் சேர்னந்த அரவிந்த் நாகராஜன் என்ற  நபரை போலீஸர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்