தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமடை அருகேயுள்ள பகுதியில், சில இளைஞர்கள், திரு நங்கைகளைக் கொடூரமாகத் தாக்கி, அவர்களுக்கு ரத்தம் வரும்வரை அடித்துச் சித்ரவதை செய்து கூந்தலை வெட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, தமிழக காவல்துறை, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.
இந்த இலையில், திருநங்கைகளை தாக்கிய 2 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆஸ்ரா கர்க் தென்மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.