கே.டி.ராகவனை கைது செய்யுங்கள்: டிஜிபியிடம் புகார் அளித்த ஜோதிமணி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:51 IST)
பாஜக தமிழக பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனை கைது செய்யுங்கள் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பாஜக பிரபலம் கேடி ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ என்று இணையதளங்களில் வைரலானது. இதனை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்பட்டிருந்த நிலையில் கே.டி.ராகவனை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் ஜோதிமணி தமிழக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார் 
 
பெண்ணிடம் ஆபாசமாக அவர் நடந்து கொண்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கேடி ராகவன் மட்டுமின்றி தமிழக பாஜகவினர் பலர் பெண்களிடம் மோசமாக நடந்துள்ளதாகவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்