கமல் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால்தான் ரஜினியுடன் கூட்டணி: பிரபல அரசியல்வாதி

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (20:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கட்சியுடன் பாமக உள்பட ஒருசில அரசியல் கட்சிகள் கூட்டணி சேரும் என்றும், அதிமுக திமுகவிலிருந்து பல அரசியல் தலைவர்கள் ரஜினியின் கட்சியில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ரஜினியின் கட்சியுடன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் கூட்டணி சேரும் என்றும் இருவரும் இணைந்தே வரும் 2021 சட்டமன்ற தேர்தலை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ’ரஜினியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே கமலஹாசன் கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார் அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் ரஜினியின் அரசியல் கட்சி வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் ஆன்மீக அரசியல் முதன்முதலாக தமிழகம் பார்க்க போகிறது என்றும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்