தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (18:02 IST)
தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது என  தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு  4 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 61 பேர் உயிரிழந்தனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 66, 571 ஆகும்.
 
 
சென்னையில் மட்டும் 
 இன்று மேலும்  1,747 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  சிகிச்சை பலனின்றி 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 70,017 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இதுவரை 1,082 பேர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்