சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்? அண்ணாமலை ஆவேசம்..!

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (14:35 IST)
சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே, 'சனாதன தர்மம்' என்ற வார்த்தை இருந்தது என்பது நிதர்சனமான உண்மை என்றும்,  நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை நாட்டின் 142 கோடி மக்களும் கண்டிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
 
ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு நேற்று வெளிவந்துள்ளது என்றும்,  குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிப்பதே இனப்படுகொலை என்றும், சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்? என்றும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்