அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார்.. பெரும் பரபரப்பு..!

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (13:38 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையான நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டெல்லி காவல் நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.  சனாதன தர்மத்திற்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்