காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்! – அமைச்சர் உதயநிதி உறுதி!

ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:31 IST)
டெங்கு, மலேரியா போல சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.



தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் தொடர்ந்து தமிழக ஆளுனருக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. ஆளுனர் பல நிகழ்ச்சிகளிலும் சனாதானத்தை ஆதரித்து பேசி வருவதற்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
அவ்வாறாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா போல சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட உரிமைகள் கண்காணிப்பகமும் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்து பேசியுள்ள அமைச்சர் உதயநிதி “நான் ஒருபோதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி, பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. அதை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும். இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன். காவி மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்