எஸ்.எஸ்.ராஜமவுலியின் தமிழக ஆன்மீக பயணம்.. அண்ணாமலை கருத்து..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (18:12 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி சமீபத்தில் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த நிலையில் இந்த பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
 
இயக்குனர் ராஜமவுலி கடந்த மாதம் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்ததாகவும் குறிப்பாக தஞ்சாவூர் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதாகவும் பழங்கால பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் கட்டடக் கலையை பார்த்து வியந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். 
 
குறைந்த நாட்கள் மட்டுமே பயணம் செய்ததால் சில இடங்கள் மட்டுமே பார்க்க முடிந்ததாகவும் இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்த தனது மகளுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் எஸ்.எஸ். ராஜமௌலி ஆன்மீக பயணம் குறித்து தனது ட்விட்டரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கோயில்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியில் உங்களது ஆன்மீக சுற்றுப்பயணம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டின் வரலாற்று கதைகள் எதிர்காலத்தில் மகத்தான படைப்பாக உங்களால் உருவாக்கப்படும் என்று உங்களின் படைப்பின் ரசிகர்கள் ஆகிய நாங்கள் விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்