ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்ஷியோடு கலந்துகொண்டார்.
விழாவில் நடிகர் யோகி பாபு பற்றி பேசிய தோனி “யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பது தெரியும். அவரை சிஎஸ்கே அணியில் சேர்க்க நான் நிர்வாகத்தோடு பேசத் தயார். ஆனால் அவர்களுக்கு ஒழுங்காக கால்ஷீட் கொடுத்து வந்து விளையாட வேண்டும். அதே போல பயிற்சிகளுக்கும் ஒழுங்காக வரவேண்டும். அதற்கு சம்மதம் என்றால் நான் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசுகிறேன்.” என ஜாலியாக பேசினார்.