நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூர் அருகே மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுகதான் பொறுப்பு என பாஜக அண்ணாமலை பேசியுள்ளார்.
இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை அறிவாலயம் நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு” எனக் கூறியுள்ளார்.