மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (13:42 IST)
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி,  ஆனால் திருமாவளவன் எல்கேஜி தான் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது ’பாட்டாளி மக்கள் கட்சியை ஜாதி கட்சி என்று திருமாவளவன் கூறுகிறார். ஆனால் எங்கள் கட்சி சமூக நீதி கட்சி, எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம்.

திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம், மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பிஎச்டி படித்துள்ளோம், அவர் இன்னும் எல்கேஜி தான் படித்திருக்கிறார், 45 ஆண்டுகளுக்கு முன்பே ராமதாஸ் அவர்கள் மதுவிலக்கு குறித்து பேசி இருக்கிறார். ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு தான் மதுவிலக்கு குறித்து திருமாவளவன் பேசுகிறார்.

ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசியது சரியான பதிவு தான். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என  யாரும் கட்சி தொடங்கவில்லை. இதுக்காக ஸ்டாலின் கோபப்படுவார் என்று எந்த கட்சியும் நினைக்க கூடாது’ என்று அவர் அன்புமணி கூறினார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்