மீனவர்களின் கைது இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதல்: அன்புமணி!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:57 IST)
மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதல் என கருத்தில் கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த நிலையில் இன்றும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
பிப்ரவரி மாதத்தில் மட்டும் என்பதுமே 80 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என்றும் இந்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டும் கூட தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல் பார்க்க வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்
 
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்