பிக்பாஸ் அல்டிமேட்: சிம்புவின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஹாட்ஸ்டார்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (07:30 IST)
பிக்பாஸ் அல்டிமேட்: சிம்புவின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஹாட்ஸ்டார்!
கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த உடன் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியானது. 
 
நேற்று புரோமோ வீடியோவுக்காக சிம்பு மேக்கப் போட்ட புகைப்படம் வைரலான நிலையில் இன்று ஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக சிம்புவின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது என்பதும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று சிம்பு தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்