நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி டிசம்பர் இறுதி அல்லது ஜனவரியில் முடிவு செய்யப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2 முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்வியுற்ற நிலையில், அடுத்த முறை ஜெயிக்க வேண்டி, திமுக, ஜனதா தளம், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி டிசம்பர் இறுதி அல்லது ஜனவரியில் முடிவு செய்யப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், ''நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்பிக்களை இடைநீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.