நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாதத் தாக்குதல் என நாங்கள் கூறவில்லை: காங்கிரஸ்

சனி, 16 டிசம்பர் 2023 (15:02 IST)
நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாத தாக்குதல் என்று நாங்கள் கூறவில்லை டெல்லி அரசு தான் கூறியது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.  

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நுழைந்த இருவர்  குறித்த செய்தி பரபரப்பாக வெளியான நிலையில் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சர் கீழ் வரும் டெல்லி போலீஸ் தான் குறிப்பிட்டுள்ளது என்றும் இந்த சம்பவத்தை நாங்கள் அரசியல் ஆக்கவில்லை என்றும்  இது பயங்கரவாத தாக்குதல் என்று காங்கிரஸ் கூறவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய நாடாளுமன்றம் உலகின் பாதுகாப்பு மிக்க இடமாக இருக்கும் என்று பாஜக தான் கூறியது, ஆனால் அவ்வாறு கூறிய மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடுதான் என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை இடைநீக்கம் செய்து அரசு தண்டித்துள்ளது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இழைத்த தவறுதான் என்ன?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்