கஜா எச்சரிக்கை!! ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்புங்கள்: தமிழக அரசு திடீர் உத்தரவு

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (13:12 IST)
கஜா புயல் எதிரொலியாக புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
தற்பொழுது கஜா புயலின் வேகமானது 25 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்