மே 31 க்குப் பிறகு அனைத்து மதக் கோயில்களும் திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
புதன், 27 மே 2020 (11:31 IST)
கர்நாடகாவில் மே 31 க்குப் பிறகு அனைத்து மதக் கோயில்களும் திறக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நான்காவது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொருளாதாரத்தை சரிப்படுத்தும் விதமாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோயில்கள் எப்போது திறக்கப்படும் என மக்களிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இதையடுத்து கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா, மே 31 ஆம் தேதிக்குப் பிறகு கர்நாடகாவில் உள்ள அனைத்து மதக் கோயில்களும் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கபப்ட்டவர்களின் எண்ணிக்கை 2182 ஆகவும், பலி எண்ணிக்கை 44 ஆகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்