இன்று முதல் சலூன்கடைகள் திறப்பு: கட்டணம் உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

ஞாயிறு, 24 மே 2020 (19:36 IST)
தமிழகத்தில் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் சலூன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது இதனை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக முடி வெட்டாமல் இருந்த பொதுமக்கள் சலூன் கடைகளில் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சலூன் கடைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அடிக்கடி கிருமிநாசினி தெளிக்க வேண்டும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் வாடிக்கையாளரும் சலூன் கடைக்காரரும் முகக்கவசம் அணிய வேண்டும் ஆகிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சலூன் கடைகளில் சானிடைசர் உள்பட பல்வேறு வசதிகள் செய்து வைத்திருப்பதன் காரணமாக செலவுகள் அதிகமாக உள்ளதாகவும் இதனை அடுத்து சலூன் கடைகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இருப்பினும் இரண்டு மாதங்களாக முடிவெட்டாமல் இருந்ததால் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து தற்போது முடிவெட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து முடி திருத்துவோர் நலச்சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் தருமலிங்கம் கூறுகையில், இரண்டு மாதம் சலூன் திறக்கப்படாமல் பெரும் அவதிப்பட்டு வந்து நிலையில், நகர்ப்புறங்களிலும் முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதித்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வேலை செய்து வருகிறோம். இதனால் கூடுதல் செலவாகிறது. ஆகையால் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்