உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை-ராமதாஸ் டுவீட்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (21:40 IST)
தமிழகத்தில் வெள்ளத்திற்குக் காரணமம் உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்  முதற்கட்ட தேர்தல் நாளன்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில்  மக்களுக்குச் சில வேட்பாளர்கள் மக்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்  தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதற்கு காரணம் வடகிழக்கு பருவமழையோ, தென் மேற்கு பருவமழையோ அல்லவாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை தானாம்! எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்