15 மணிநேரப் போராட்டத்திற்கு பின்…கிணற்றில் விழுந்த யானை மீட்பு…

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (20:35 IST)
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே குட்டியானை ஒன்று கிணற்றில் விழுந்த நிலையில் அதை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படை பல மணிநேரம் ஈடுபட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே குட்டியானை ஒன்று 50 அடி ஆழக் கிணற்றில் விழுந்தது.

இந்த யானையை மீட்க சுமார் 15 மணிநேரம் மீட்புப் படையினர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.


இந்நிலையில் கிணற்றில் விழுந்த குட்டியானை வனத்துறையினரின் தீவிர முயற்சியால் மயக்க ஊசி செலுத்தி கிரேன் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்