பார்டரில் பாஸ் ஆன அதிமுக; மெரிட் அடிக்க அதிரடி வியூகம்!!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (15:10 IST)
கடந்த தேர்தல்களை போல இல்லாமல் வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என அதிமுக முடிவு செய்துள்ளதாம். 
 
வரவுள்ள 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என திமுகாவும், எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுகவும் செயல்பட துவங்கியுள்ளன. 
 
சமீபத்தில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து,    மீத்தேன் திட்டத்திற்கு அதிரடியாக ஆப்பு வைக்கும் வகையில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது என மக்களுக்கு தேவையானதை, மக்கள் எதிர்ப்பார்ப்பதை செய்து வருகிறது அதிமுக. 
 
குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று பார்டரில் பாஸ் ஆகாமல் மெரிட் அடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாம். இதற்காகத்தான் தற்போது முதலே களப்பணியை ஆரம்பித்துள்ளதாம். இதன் ஒரு பகுதியாக தன நான்கு நாட்களுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தப்படுகிறதாம். 
 
கடந்த தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களை ஆய்வு செய்ய, தொகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டு அதை தீர்த்து வைக்க என படு ஜோராக வேலையை துவங்கியுள்ளது அதிமுக. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்