சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம்: தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:22 IST)
சமீபத்தில் சொத்துவரி 25 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் சொத்து வரி உயர்வை திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது 
 
சொத்து வரி உயர்வுக்கு காரணமான அதிமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்