ஜெயலலிதாவின் வேதா நிலையம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு!

சனி, 2 ஏப்ரல் 2022 (08:49 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அவருடைய சகோதரர் மகன் தீபக் சகோதரர் மகள் தீபா ஆகிய இருவருக்கு தான் செல்லும் என சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டது 
 
இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 
 
இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்