நடிப்பு சக்கரவர்த்தி ’சிவாஜியின் பிறந்த தினம் இன்று !

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (17:38 IST)
உலக அளவில் மிகச் சிறந்த நடிகர் என்று புகழப்படுகின்றவர் நடிகர் சிவாஜி. சிம்மகுரலோன், நடிப்பு திலகம் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படும் இவர் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானது பராசக்தி படம். கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் தமிழகம் எங்கும் இப்படம் அதிரி - புதிரியாக ஹிட்டானது.
சிவாஜியை நடிப்பு பிரம்மாவாகக் கொண்டு, தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் உள்ள வளர்கலை நடிகர்களுக்கு எல்லாம் அவரே முன்மாதிரியாக இருந்தார். இப்போதுள்ளவர்களுக்கும் அவரே முன்மாதிரியாக இருக்கிறார். இனியும் இருப்பார். 
 
உலகம் எங்கும் இருந்து எத்தனையோ விருதுகள், அங்கீகாரம் கிடைத்தபோதும், இந்தியாவில் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சிவாஜிக்கு  கிடைக்கவில்லை என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் மன வருத்தமாக உள்ளது.
 
காலவெளியில் எத்தனையோ படங்கள் மக்கள் மனதிலிருந்து மறைந்தாலும், சிவாஜியின் ஆண்டவன் கட்டளை, பாசமலர், பராசக்தி, மனோகரா, உத்தமபுத்திரன் , வீரபாண்டிய கட்டபொம்மன், என எண்ணற்ற திரைப்படங்கள் அவரது நடிப்பின் புலமையை குரல்மொழியை ஓதிக் கொண்டே இருக்கும். இன்று  91 வது பிறந்த தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் உள்ள சிவாஜி ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்