காங்கிரஸ் கட்சியில் சேர அப்துல்கலாம் அண்ணன் மகன் முடிவு

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (07:05 IST)
முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் மக்களின் ஏகோபித்த அன்பை பெற்றவருமான அப்துல்கலாம் அவர்களின் மூன்றாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.
 
இந்த சில திறப்பு விழாவில் அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம்.ஹாஜா செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டு சிலைக்கு மரியாதை தெரிவித்தார்.
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மூலம் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்தார்.
 
ஏற்கனவே இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் என்பதும், அக்கட்சியில்  மாநில மற்றும் அகில இந்திய சிறுபான்மை துறை செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்