பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி தர உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது.
அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இதனால் லிட்டர் 28 ரூபாய் விற்ற பசும்பால் 32 ரூபாயாகவும், லிட்டர் 35 ரூபாய் விற்ற எருமைபால் 41 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்படி விலை நிர்ணயம் வரும் திங்கட் கிழமை (ஆகஸ்டு 19) முதல் அமலுக்கு வருகிறது.
தனியார் பால் நிறுவனங்களை ஒப்பிடும்போது அரசு துறையான ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கே பால் விநியோகிக்கிறது. பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் 4.60 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.