ஆத்தூர் அருகே ஆம்னி மோதி 6 பேர் பலி! – துக்கத்திற்கு சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (10:46 IST)
ஆத்தூர் அருகே துக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்றவர்கள் ஆம்னி பேருந்து மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இவரது 30ம் நாள் துக்கத்தில் கலந்து கொள்ள அவரது உறவினர்கள் பலர் ஆத்தூர் சென்றுள்ளனர். நேற்றிரவு 1 மணி அளவில் சிலர் டீ குடிப்பதற்காக ஆம்னி காரில் புறப்பட்டுள்ளனர்.

ஆம்னி கார் துலுக்கனூர் புறவழிச்சாலை வழியாக சென்ற நிலையில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்துடன் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். உயிருக்கு போராடிய சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தப்பியோடிய ஆம்னி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்