மனைவியை ரயில் முன் தள்ளி கொன்ற கணவன்! – அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (10:12 IST)
மகாராஷ்டிராவில் ரயில் நிலையம் ஒன்றில் மனைவியை கணவனே இழுத்து சென்று ஓடும் ரயில் முன் வீசிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தில் ஒரு பெண் உடல் சிதைந்து இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீஸார் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

நேற்று விடியற்காலை 4 மணியளவில் அந்த ஸ்டேஷனில் கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவாத் எக்ஸ்பிரஸ் அந்த பக்கமாக வேகமாக சென்றுள்ளது

அப்போது தூங்கிக் கொண்டிருந்த மனைவியை வேகமாக தரதரவென இழுத்து சென்று அந்த கணவன் தண்டவளாத்தில் தள்ளியுள்ளார். இதனால் ரயிலில் அடிபட்டு அந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார். உடனே குழந்தைகளை தூக்கிக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்