நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

புதன், 17 ஆகஸ்ட் 2022 (09:05 IST)
மகாராஷ்டிராவின் கொண்டியா பகுதியில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்குநேர் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் அதிகாலை 2.30 மணியளவில் மும்பை அருகே கொண்டியா பகுதியில் வந்துக் கொண்டிருந்துள்ளது.

அப்போது அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக எதிரே ரயில் வந்ததால் வேகத்தை கட்டுப்படுத்துவதற்குள் மோதி இரண்டு ரயில்களும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்