பசுமைக்குடி ...நஞ்சில்லா உணவு நோயில்லா வாழ்வு

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (20:30 IST)
இந்த ஆண்டு பசுமைக்குடி மூலம் நஞ்சில்லா உணவு நோயில்லா வாழ்வு முழக்கத்துடன் வழங்கப்பட்ட இயற்கை காய்கறி விதைகள் விதைக்கப்பட்டு நல்ல அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது. 
 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமம், வ. வேப்பங்குடியில் விதைக்கப்பட்ட விதைகள் நன்கு வளர்ந்துள்ளது. 
 
கடந்த 5 ஆண்டுகளாக பசுமைக்குடி நஞ்சில்லா உணவு நோயில்லா வாழ்வு என்ற நோக்கில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு விதைகள் வழங்கி விதைப்பரவலாக்கம் செய்துள்ளது. 
 
2021 ல் மட்டும் 5000 குடும்பங்களுக்கு விதைகள் கொடுத்திருந்தோம். ஆனால் 2 ஆண்டு தொடர் கொரோனா பேரிடரில் அவைகள் எப்படி வளர்ந்தது என்று கேட்டறிய முடியவில்லை. 
 
இந்த செய்தியை பார்க்கும் எவரேனும் பசுமைக்குடி விதைகள் மூலம் இன்னும் காய்கறி விளைவித்து பயன்பெற்றால் அதனை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் 
 
இந்த ஆண்டு மீண்டும் விதைகள் கொடுக்க முயல்கிறோம். ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு 4 பேருக்காவது விதை அவர்களாகவே கொடுக்க வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்