கரூர்: வேப்பங்குடியில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம்

சனி, 11 பிப்ரவரி 2023 (23:02 IST)
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவனை கிராமம் வ. வேப்பங்குடியில்,  வரவனை ஊராட்சி மன்றமும் ,பசுமைக்குடி தன்னார்வ இயக்கமும், மாயனூர் தர்ஷன் ஆயுர்வேத சிகிச்சை மையமும் இணைந்து  இன்று 10/02/2023 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
 
இம் முகாமில் திரு மு. கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும் P.மோகன்குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், திரு கே. தர்மராஜ் தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வ.வேப்பங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர் மாயனூர் டாக்டர் சித்ரா குணசேகரன் B.A.M.S தலைமை பொது மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினர்கள் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சையும் வழங்கினார்கள்.
 
வரவனை கிராமத்தைச் சுற்றி உள்ள பொதுமக்கள் 75க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
 
மேலும் பசுமை பிடி தன்னார்வலர்கள் சி. கருப்பையா, T. காளிமுத்து கவினேசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்