சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

Siva

செவ்வாய், 31 டிசம்பர் 2024 (17:41 IST)
சென்னை மாநகராட்சிக்கு   2023-2024-ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ள  நிலையில் தொழில் வரியை மாநகராட்சி தற்போது மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இதனால் தொழில் வரி செலுத்துவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்ற நிலையில், 6 மாதத்துக்குள் ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தொழில் வரி ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690-க்கு பதிலாக ரூ.930 தொழில் வரி கட்ட வேண்டும் என்றும், ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையில் வருமானம் உள்ளவர்களும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அரையாண்டு உயர்த்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்