ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திடீர் தீ விபத்து

Webdunia
சனி, 26 மே 2018 (20:01 IST)
நேற்று திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை ஒன்று திடீரென மதம் பிடித்து யானைப்பாகனையே கொலை செய்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த கோவிலில் பரிகாரம் செய்யப்பட்டு பின்னர் கோவில் பக்தர்களின் வழிப்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
 
இந்த நிலையில் திருச்சி அருகே உள்ள இன்னொரு புகழ்பெற்ற கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ள வசந்த உற்சவ மண்டபத்தில், வெட்டிவேரால் போடப்பட்டிருந்த பந்தல் தீப்பிடித்து எரிந்ததாகவும், இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த தீவிபத்து குறித்த முதல்கட்ட விசாரணையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் வசந்த உற்சவ மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து பந்தலுக்கு தீ பரவியதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்