இதனையடுத்து கர்நாடக ஆளுனர் வஜூபாய் வாலா குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஆளுனர் வஜூபாய் வாலாவை குமாரசாமி சந்தித்தார். அதன்படி கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக 21-ந் தேதி(நாளை) பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்தார். அதோடு, மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். ஆனால், எனக்கு அவ்வளவு நாட்கள் தேவையில்லை. முதல்வராக பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் என் பலத்தை நிரூபிப்பேன் என அவர் தெரிவித்தார்.
மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பூஜை நடத்துவதற்காக அவர் இன்று தமிழகம் வருகிறார். எம்.எல்.ஏக்களின் சான்றிதழ்களை வைத்த அவர் பூஜை செய்வார் எனத் தெரிகிறது. அதற்காக இன்று மாலை அவர் விமானம் மூலம் திருச்சி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பு குமராசாமியின் சகோதரர் ஸ்ரீரங்கம் கோவிலில் பூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.