பிளிப்கார்ட் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி என்ற பகுதியில் பிளிப்கார்ட் டெலிவரி அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த ஒரு கும்பல் அங்கு பணி செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது இந்த கும்பல் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது
சீர்காழியில் இயங்கிவரும் பிளிப்கார்ட் டெலிவரி அலுவலக வாசலில் அமர்ந்து கடந்த 9ஆம் தேதி இரவு 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாகவும், இதனை சூர்யா என்ற ஊழியர் அவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த கும்பல் மறுநாள் மாலையில் குடிபோதையில் அலுவலகத்திற்குள் புகுந்து சூர்யாவையும் அவரது சக ஊழியர்களையும் தாக்கியுள்ளதாக தெரிகிறது
இந்த தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த பொருள்கள் சூறையாடப்பட்டதாகவும் சுமார் 6000 ரூபாய்க்கு மேல் பணம் திருடு போனதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் சரவணன் அரவிந்தன் மனோ அபினேஷ் தினேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து போலீசார் தேடி வருகின்றனர்