குடிபோதையில் காவலர்களுக்கும் எச்சரிக்கை விட்டதோடு, சேட்டை செய்த கூலித்தொழிலாளி கைது ?

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (20:53 IST)
கரூரில் கடும் குடிபோதையில் போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிய குடிமகன் ! நிருபர்களுக்கும், போக்குவரத்துகாவலர்களுக்கும் எச்சரிக்கை விட்டதோடு, சேட்டை செய்த கூலித்தொழிலாளி கைது ?
 

தமிழக அரசின் உத்திரவுப்படி ஆங்காங்கே தமிழக அளவில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டுகள் பொதுமக்கள் அணியுமாறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் ஆங்காங்கே கடுமையாக பரிசோதிக்கப்பட்டும் வரும் நிலையில், கரூர் நகர போக்குவரத்து காவலர்கள், பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அங்கே வந்த சொகுசு காரானது தாறுமாறாக ஓடியதோடு, அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனத்தின் மோதி விட்டு, தப்பி ஒட முயன்றவரை, போக்குவரத்து துறை காவல்துறை உதவி ஆய்வாளர் அண்ணாத்துரை, துரத்திபிடித்து சினிமா பாணியில், அவரையும், அந்த காரையும் பிடித்தனர்.

அப்போது., பாலசுப்பிரமணி என்பதும், நெரூர் பகுதியை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது குடிபோதையில் வாகனம் ஒட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஒட்டியது, சாலைவிதிகளை கடைபிடிக்க தவறுதல் என்று வாகன வழக்குகள் 4 பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் நகர காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பாலசுப்பிரமணி, அங்கே போக்குவரத்து காவலர்களிடமும், வீடியோ எடுக்க முற்பட்ட செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்