கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு..!

Siva

புதன், 19 ஜூன் 2024 (19:22 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  விவகாரத்தில்  8 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  விவகாரத்தில்  பிரவீன், சேகர், மணிகண்டன், சுரேஷ், தனக்கொடி உள்ளிட்ட 8 பேர் உயிரிழப்பு என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் கள்ளச்சாராயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்  குடித்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்