நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது: பாஜக தலைவர் அண்ணாமலை

Siva

புதன், 19 ஜூன் 2024 (19:27 IST)
நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளது  என்றும், எனவே நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
பள்ளிக்கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது என்றும், பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக  அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது என்றும், தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என்றும், கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதியரசர் சந்துரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
ஏற்கனவே இந்த அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, நீதியரசர் சந்துருவின் பரிந்துரைகள் கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்