கூலித்தொழிலாளர்கள் சென்ற வேன் அரசு பேருந்து மீது மோதி விபத்து..

வியாழன், 26 செப்டம்பர் 2019 (20:20 IST)
கரூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கூலித்தொழிலாளர்கள் சென்ற வேன் அரசு பேருந்து மீது மோதி விபத்து – இரண்டு பேர் பலி – நஷ்ட ஈடு வழங்க கோரியும், அந்த தனியார் நிறுவனத்தினை உடனடியாக மூடக்கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்த காருடையாம்பாளையம் பகுதியில் இயங்கும் விக்டோரியா பேப்பர் போர்டு என்கின்ற டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 15 க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு, டெம்போ வில் நேற்று மாலை தோகைமலைக்கு புறப்பட்டது. இந்நிலையில், கரூர் டூ கோவை சென்ற அரசு பேருந்து எதிரே வந்த அந்த டெம்போ வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே, சினேகா (வயது 22) என்ற பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் இருந்த போத்துராவுத்தன்பட்டி பகுதியை சார்ந்த அந்த வேன் டிரைவர் முருகன் என்பவர் கோவைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் உயிரிழந்தார்.

இருவரது உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு க.பரமத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்., இந்நிலையில், தனியார் நிறுவனம் விக்டோரியா பேப்பர் போர்டு நிறுவனத்தின் மெத்தனப் போக்கினால் தான், முருகன் அநியாயமாக உயிரிழந்தார் என்றும் உரிய சிகிச்சை அளித்திருந்தால், முருகன் காப்பாற்றப்பட்டிருப்பார். அங்கு சிகிச்சைக்கு எந்த வித பணமும் அளிக்க வில்லை என்றும், இருவரது உயிர்களை பழிவாங்கிய இந்த தனியார் நிறுவனம், இந்த இருவரது குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரியும், அதே விபத்தில் படுகாயமடைந்த 9 நபர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,. அவர்களுக்கும், மேல் சிகிச்சைக்காக, எந்த உதவி தொகையும் வழங்காமல் அந்த தனியார் நிறுவனமான விக்டோரியா பேப்பர் போர்டு நிறுவனம் இருந்து வருவதாகவும் கூறி உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும், ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ற கருணை இல்லாமல், இருந்து வரும் அந்த நிறுவனத்தினை மூடக்கோரியும் எதிர்ப்பலைகள் ஒலிக்க  தொடங்கியுள்ளன. இந்த சம்பவத்தினால் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்