பவானிசாகர் அணையில் இருந்து 8000 கன அடி நீர்த்திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!
பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல்கள் வெளிவந்துள்ளது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 6757 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது