பொன்னை அணைக்கட்டிலிருந்து நீர் திறப்பு; வேலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திங்கள், 8 நவம்பர் 2021 (08:03 IST)
பொன்னை அணைக்கட்டிலிருந்து நீர் திறப்பு; வேலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை அணைக்கட்டில் இருந்து அதிக அளவிலான உபரிநீர் திறக்கப்படுவதை அழகான பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்துமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே செம்பரபாக்கம் ஏரி, பூண்டி ஏரி, மதுராந்தகம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளநீர் போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வேலூர் மாவட்டம் பொன்னை அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 2142 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பொன்னை ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் ஆறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்