திடீரென தீப்பற்றி எறிந்த அண்ணா சாலை சிக்னல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (13:50 IST)
திடீரென தீப்பற்றி எறிந்த அண்ணா சாலை சிக்னல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை அண்ணா சாலையில் உள்ள சிக்னல் திடீரென தீப்பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதையடுத்து ஆங்காங்கே மின்சார கசிவு ஏற்படுவதாகவும் இதனால் ஒரு சில இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனையடுத்து தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் சிக்னலில் தீப்பற்றி எரிந்ததை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்