6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலி.. ரூ.50,000 நிதி உதவி வழங்கிய அமைச்சர்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (11:57 IST)
கோவை தொண்டாமுத்தூர் அருகே 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் குழந்தையின் பெற்றோருக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலை பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தண்ணீர் தொட்டியில் இருந்து அந்த பள்ளியில் படிக்கும் சிறுவன் குகன் ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். சிறுவன் குகன் ராஜ், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என முதற்கட்ட போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியான சிறுவன் குகன்ராஜ் பெற்றோருக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்