6.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லையா? அரசு தேர்வு இயக்ககம் மறுப்பு!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:49 IST)
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான செய்திக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 
கடந்த சில நாட்களாக பொதுத்தேர்வு நடைபெற்றது என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். தற்போது பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. 
 
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11 ஆம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10 ஆம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
 
இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான செய்திக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாட வாரியான தேர்வு எழுதாதவர்கள் எண்ணிக்கை குறித்து தினமும் தகவல் வெளியிட்ட நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்