மேலும் ஒரு தஞ்சை கல்லூரியில் 20 மாணவர்களுக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:32 IST)
கடந்த சில நாட்களாக தஞ்சை பகுதியில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்
 
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்ட போதிலும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. ஏற்கனவே தஞ்சை பகுதியில் உள்ள பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் தற்போது தஞ்சை ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தஞ்சையில் இதுவரை மொத்தம் 187 பள்ளி மாணவர்கள் மற்றும் 38 கல்லூரி மாணவர்களுக்கு என 225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 110 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்