அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்... எங்கெங்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (16:34 IST)
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கரூர், மதுரையில் மழை நீடிக்க வாய்ப்பு. 
 
மேலும் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்