திமுக மண்டல மாநாட்டால் தமிழக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய லாபம்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (19:07 IST)
சமீபத்தில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெற்றது. பிரமாண்டமான மேடை, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களின் வருகை, வண்ண வண்ண விளக்குகள் என மண்டல மாநாடு ஒரு பெரிய திருவிழா போல் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்காக தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திமுக தொண்டர்கள் கடல் அலைபோல் குவிந்திருந்தனர்

இந்த நிலையில் மண்டல மாநாடு நடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகமான அளவில் மது விற்பனையாகியுள்ளதாகவும் இதனால் தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக மாநாடு நடந்த பகுதியின் அருகில் உள்ள  விஜயமங்கலம், கள்ளீயம்புதூர், பெரிய வீரசங்கிலி ஆகிய பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபான கடைகளில் இரண்டு நாட்களில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. சாதாரண நாட்களில் இந்த கடைகளில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே மது விற்பனையாவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு நடந்து கொண்டிருந்தபோது பெரும்பாலான திமுக தொண்டர்கள் மதுபோதையில் இருந்திருப்பது தற்போது தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்